Monday, May 7, 2012

Ithayam intha ithayam - இதயம் இந்த இதயம்

Movie: Billa 2 (2012)
Vocal: Shweta Pandit
Lyrics: Na Muthukumar
Song: Ithayam intha ithayam

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே..
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரி மலையா
இதை அறிந்தோர் யாரும் இல்லை
உள்ளத்திலே அறை உண்டு ஓசை இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

தூங்கும் போதும் இது துடித்திடுமே
ஏங்கும் போதும் இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாரும் இல்லை
இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையே மரி இழக்கும் 

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

For any mistakes, please leave a comment, I will update the same. Thanks.

Friday, May 4, 2012

ஒரு நிழற்படம் போதுமோ???

ஒரு நிழற்படம் போதுமோ?

புதைந்த நினைவுகளை அகழ?

மறுத்த தருணங்களை மறுமுறை வாழ?

மறந்த உறுவுகளை நினைவில் கொள்ள?

இழந்த கனவுகளுக்கு வண்ணம் தீட்ட?

சொல்ல விட்ட வார்த்தைகளை சொல்லி முடிக்க?

 

ஒரு நிழற்படம் போதுமோ?

சிந்திக்கிறேன்…….

இப்படிக்கு எஸ்ராம்வெண்.

 

 

Thanks to Sugan and RMS.