Tuesday, December 20, 2022

மாயோனே

 மாயோனே என் மாயோனே

மாயோனே நான் ரசிக்கும் மாயோனே 

என்னைக் காக்க மறுக்கும் மனமும் உனக்கு உண்டோ?

என்னை ஆளும் மாயாவியே!


மாயோனே என் மாயோனே 

உன்னை காண கோடி கண்கள் வேண்டாமோ?

மாயோனே - என்னை காக்கும் மாயவா 

உன்னை துதிக்காத தருணம் வேண்ட - வரம் 

அருள்வாயோ கருநீல அழகா!!எனை ஆளும் மாயாவியே!

 

மாயோனே என் மாயோனே 

வைரம் சுழலும் சக்ரதாரி -

ஒரு க்ஷணம் போறாதோ மாயவா ?

என்னை சுழலும் மாயச் சக்கரம் உடைக்க,

உன் திருவடி விட்டு நான் நகராமல் வைராக்கியம் கொள்ள?

ஒரு வரம் அருள்வாயோ? எனை ஆளும் மாயாவியே!


மாயோனே என் மாயோனே 

அபய ஹஸ்தம் கொண்டு காப்பீரே,

உன் மாய வலையில் மீண்டு - நான் 

உன்னை காண வரும் தருணம் 

இவன் பால் இரக்கம் கொண்டு- திருமால் அடி சேர 

வரத ஹஸ்தமும் அருள்வீரே,எனை ஆளும் மாயாவியே!


மாயோனே என் மாயோனே 

என்னை காக்கும் மாயோனே 

நான் துதிக்கும் மாயோனே 

என்னை துதிக்க வைக்கும் மாயோனே 

உன் புன்முறுவல்  ஒன்று போதாதோ?

இந்த மாயையில் சிக்கி தவிக்க 

கோடி ஜென்மம் எடுப்பேன் 

மீண்டும் மீண்டும் உன் புன்முறுவலை ரசிக்க,

எனை ஆளும் மாயாவியே!

மாயோனே என் மாயோனே....