Sunday, January 3, 2010

தமிழ் படத்துல வந்த ‘டயலாக்கு’

சிட்டிசன் (கோர்ட் சீன்):

அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

அஜீத்: தெரியாதே…

நீதிபதி: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு… போய்யா சவுண்ட் விடாம!

****

காக்க காக்க:

ஜீவன்: ‘அவளை’ தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…

சூர்யா: ‘அவளை’ தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா ‘அவ’ 120 கிலோ!

****

சந்திரமுகி:

பிரபு: என்ன கொடுமை சரவணன்…

தலைவர்: எது? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா???

****

ரமணா:

வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”

****

திருமலை

விஜய்: யார்டா இங்க அரசு???

(முதல் நபரை பார்த்து): நீ அரசா?

(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???

அந்த நபர்: நான் அந்துமணிப்பா… அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு…!

****

நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்…

டிராபிக் போலிஸ்: அட சும்மாருங்க… அவன் போகும் போது “கிரீன்” சிக்னல்… இப்ப “ரெட்”டு…

****

பாபா:

தலைவர்: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்….

கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க…

****

மாயாவி:

சூர்யா: யார்ரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல… நானும் யாருக்கும் போட்டி இல்ல… என்ன சரியா???

சந்தானம்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குடா பன்ச் டயலாக்? விஜய் படம் பாக்காத, அவனோட பழகாதன்னு சொன்னா கேக்கறியா???

****

சிங்கம்:

சூர்யா: பரவால்லயே ஹரி… இந்த வாட்டி படம் அனௌன்ஸ் பண்ண உடனே எல்லா ஏரியாவும் வித்துப் போச்சுன்னு டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் போன் பண்றாங்க… எல்லாம் ஆதவன் ராசி…

ஹரி: அட சத்தம் போட்டு பேசாதீங்க… வித்துப் போச்சுன்னு சொன்னது, எல்லா ஏரியாவுலயும் இருந்த அவங்கவுங்க சொத்துக்களை!



ஜேம்ஸ்பாண்ட் ஒரு இந்தியனை சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பாண்ட் - என் பெயர் பாண்ட் (ட்ரேட்மார்க் சிரிப்புடன்) ஜேம்ஸ்பாண்ட். உங்கள் பெயர்?

இந்தியன் - நான் நாயுடு
வெங்கையா நாயுடு

சிவ வெங்கையா நாயுடு
லக்ஷ்மிநாராயண சிவ வெங்கையா நாயுடு
ஸ்ரீநீவாசலு லக்ஷ்மிநாராயண சிவ வெங்கையா நாயுடு
ராஜசேகர ஸ்ரீநீவாசலு லக்ஷ்மிநாராயண சிவ வெங்கையா நாயுடு
சீதாராம ஸ்ரீநீவாசலு லக்ஷ்மிநாராயண சிவ வெங்கையா நாயுடு




பாண்ட் - தெரியமா சொல்லிட்டேன், உட்ருப்பா

இந்தியன் - அது

No comments:

Post a Comment