Tuesday, September 27, 2011

பயணிக்க தொடங்கி விட்டேன்

photo (1 of 1)-3

களவையும் கற்று
மறக்க  சொன்னார்கள்,
ஆனால் உன்னை  மறப்பது  எப்படி?
மறுத்துவிட்டார்கள்  சொல்வதற்கு.

உன்  மேல்  நேசம்  கொள்கையில்,
உன்  நினைவுகள்   மட்டும், 
என்  கனவுகளை  வண்ணத்தில்  ஆழ்த்தின.

கனவுகளுக்குத்தான் எப்படித்  தெரியும்
என்  அருகில்  எப்பொழுதும் நீ  சுவாசிக்க  மறுத்தாய்   என்று?
நள்ளிரவில் வண்ணங்களை  அணிய  மறுத்துவிட்டன .

சுமக்க  ஒரு  மனம்  இன்றி,
உன்  மீது  கொண்ட  நேசமோ  கனக்கிறது.
செய்வது  அறியாது,
பாதை  அறியாது,
பயணிக்க  தொடங்கி  விட்டேன்  -
என்  வாழ்கையோடு
இப்படிக்கு எஸ்ராம்வேன்

No comments:

Post a Comment