Monday, October 15, 2012

எவ்வளவு காதல்.....


வீதியின் ஆதியில் என்னைக் கண்டவுடன் 
உன் நடையின் வேகத்தில் ஒரு மந்தம்,
அலைப்பாயும்   உன் கண்களோ, என் 
சிரம் கண்ட திசையை நோக்க மறுத்தன 
என் பல கோடி வார்த்தைகளுக்கு பதிலோ 
உன் புன்னகை மறந்த இதழ்களே 
வேடிக்கையாய் இருக்கிறது 
உனக்குள் தான்  எவ்வளவு காதல் 
என்னை காதலிக்க மறுக்க 
இப்படிக்கு எஸ்ராம்வெண்

No comments:

Post a Comment