Saturday, March 29, 2025

மௌனம் பேசும் திமிர்

 சொல்ல ஆயிரம் உள்ளது

சொன்னால் மாறுமா?

கதிரவனோ அம்புலியோ

சுற்றமோ நட்போ

செல்வமோ வறுமையோ

சிரிப்போ அழுகையோ

எதுவும் மாறாது!


கேட்கும் மனம் நோவும்

சொல்லும் மனம் கதறும்

இதில் மாற்றம் இல்லை!

சொன்னாலும் மாற்றம் இல்லை!

கேட்டாலும் மாற்றம் இல்லை!


உன்னிடம் தான் கேட்கிறேன் —

அவ்வளவு திமிரமா?

கேட்டவர்கள் பலர்!

வாய் மட்டும் இல்லை,

மனமும் சாய்ந்து போகும் —

சொல்லாத கண்ணீர் வழிய,

ஊரார் முன் திமிர் கொண்ட

முகமூடி அணிந்து,

மௌனம் என்னும் நகை அணிந்து,

புன்னகையின் பின்

உணர்வுகளை புதைத்துத்,

வலம் வந்தான் — நகைத்து கொண்டு,

தன் நிலைமையின் திமிரை எண்ணி



No comments:

Post a Comment