Wednesday, March 30, 2011
யாரோ!!! எவனோ!!!
Tuesday, March 8, 2011
நீயே மையமாய் இருக்கிறாய்
Something made me to write the below lines
ஒற்றை கண்ணின் ஓரத்தில்
உன் கரு வண்டினை நிருத்தினாயே ஏன்?
என் கையில் இருக்கும் ஐஸ் கிரீமை பறிக்கவோ?
பட்டும் படாமல் என் தோளில்
உன் பூக் கரத்தால் அடித்தாயே ஏன்?
என் கையில் இருக்கும் ஐஸ் கிரீமை தட்டிவிடவோ?
Hmmm….funny eh? so came up with the below later.
ஒற்றை கண்ணின் ஓரத்தில்
உன் கரு வண்டினை நிருத்தினாயே ஏன்?
என் கண்கள் நோட்டமிடும், இடம் அறியவோ?
பட்டும் படாமல் என் தோளில்
உன் பூக் கரத்தால் அடித்தாயே ஏன்?
என் முகம் உன் திசை நோக்கவில்லை என்றா?
காக்கை இறகைப் போன்ற உன் கூந்தலை
என் முகம் மீது படரச் செய்தாயே ஏன்?
தூங்காமல் உன்னை ரசிக்க வேண்டும் என்றா?
செல்லமே, எத்திசையில் என் முகம் நோக்கினாலும்
எவ்விடத்தில் என் கண்கள் நோட்டமிட்டாலும்
எப்பொழுதில் நித்திரையில் ஆழ்ந்தாலும்- நான்
காணும் இடத்திலும், நோக்கும் திசையிலும்
சிந்திக்கும் எண்ணங்கள் அனைத்திலும்
நீயே மையமாய் இருக்கிறாய்
இப்படிக்கு எஸ்ராம்வெண்