அழகாய் அறிமுகப்படுத்தினாய்,
என் உறவினருக்கு முதல்வனாய் தெரிந்த போது!!
என் உற்றார்க்கு தலைவனாய் தெரிந்த போது!!
என் சகாக்களுக்கு உதாரணமாய் தெரிந்த போது!!
என் பெற்றோர்க்கு செல்லமாய் தெரிந்த போது!!
அழகே என்னை என்னிடம்.
என் தலை கனத்தால் என்னை எடுபடியாய்,
என் அளவற்ற திமிரால் என்னை வேலைக்காரனாய்,
என் அகம்பாவத்தால் என்னை மாதிரித்துணுக்காய், - இறுதியில்
என் சுயநலமான எண்ணங்களால் என்னை உன் காதலனாய்,
இருக்க, துளியும் தகுதி இல்லை என்று.
நன்றிகள் பல நெஞ்சில் சுமந்துகொண்டு
தொடங்குகிறேன் - என் வாழ்வில்
புதிதாய் ஒரு அத்தியாயத்தை,
இப்படிக்கு எஸ்ராம்வெண்
Thanks to Sugan and Sugan for reviews and suggestions.