என் எண்ணங்கள் அனைத்தும் உன் புறம் வீற்றிருக்க
நொடி கணக்கில் சுட்டு விட்டாய் அடி சகியே -
ஒரு நொடி கூட என் எண்ணத்தில் நீ இல்லை என்று.
இழைத்தது சிறு தீங்கு அல்ல நான் மன்னிக்கப்பட,
இருப்பினும் புன்னகை உன் இதழில் வீற்றிருக்க
இரு கரம் கொண்டு என்னை நந்தவனத்தில்
நட்ப்பென்னும் நாற்காலியில் வீற்றிருக்கச் செய்தாய்.
மறக்க வில்லை, நான் மன்னிக்கப்பட்டதை மறக்க வில்லை!!
புயல் வீசினாலும், சூரியன் சுட்டாலும்
பூமி பிளந்தாலும், வானம் போர் முரசிட்டாலும்
ஒரு நொடி அசைய மாட்டேன் நாற்காலியில்
எப்பொழுதிலும் வீற்றிருப்பேன் - உனக்காக
செவி சாய்ப்பதற்கு , இப்படிக்கு எஸ்ராம்வெண்.
No comments:
Post a Comment