சட்டென்று விழித்தேன்
கண்கள் உன்னைத் தேட
சுற்றத்தில் நீ இல்லை - என்
நெஞ்சத்தில் வேறெவரும் இல்லை
மயானம் தோற்கும் அமைதி - என் வாழ்விற்கு
நீ எழுதும் நியதி
அக்னியும் அலறும் சூடு - என் மனதிற்கு
நீ கொடுக்கும் வடு
நித்தம் நாம் சென்ற பாதை
பித்தம் கொண்டு திரிந்தேன்
உன் பிம்பம் தேடி நான் செல்ல
தொடுவானத்தையும் நான் கடந்தேன்
குளிர் காற்று வீச
நிழல் ஒன்று கிடைக்க
யாக்கை உறங்கத் துடிக்க
நிம்மதி மறந்த நெஞ்சம்
என் நிழலையும் மறக்கடிக்க
இடைவிடாத உன் மௌனம்
முடியாத என் ஏக்கம்
தொடரும் உன் பயணம்
வளரும் நம் தூரம்
உன் பிரிவால் தனிமை
உன் நினைவால் வெறுமை
அவ்ரணத்தால் சுகம் - புன்னகைத்தேன்
விழிகளில் வெள்ளம் பொங்க
இப்படிக்கு எஸ்ராம்வெண்
Thanks to Raj for the patience and courage, each time i reach out to him.
Previous on same genre.
No comments:
Post a Comment