விதியை மதியால் வெல்லலாம் என்றார்கள்
விதி என்று ஒன்று உண்டா? - என்று நகைத்த காலம் அது.
பல நாள் கனவடி என் செல்லமே, நான்
பல நாள் காத்திருந்த நிகழ்வடி அது.
கனவ்வொன்று மெய்யாகிறது என்றால், தன்
கண்ணால் எவன் தான் காண மறுப்பான்?
வேண்டும் என்று நான் புறக்கணிக்கவில்லை
வேண்டாம் என்று நான் முடிவும் செய்யவில்லை.
காலம் செய்த கோலம் என்று சொல்வதா? இல்லை என்
இயலாமை என்று சாந்தப்படுதிக்கொல்வதா?
சினம் வேண்டாம் என் மீது, காரணம் நானே
சினம் கொண்டுள்ளேன் என் மீது.
முன்னின்று, உற்றார் உறவினர் படை சூழ
மேற் பார்வை பார்க்க வேண்டிய நான், எங்கோ
மறைந்திருந்து, செய்தி பிறர் சொல்
மூலம் கேட்டு அறியும் நிலையில் உள்ளேன்,
இது தான் விதி என்பார்களோ? சிந்திக்கிறேன்.
இப்படிக்கு ஸ்ராம்வேன்
Monday, June 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
It is part of life.
Post a Comment