I just received this mail from a good frien of mine. I dearly call him pillai. It is so comical that I decided to share this with you....
ரொம்ப நாளாக எஃப்.எம்முக்கு கால் செய்து மொக்கைப் போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய பாலாஜி லைனைப் போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.
FM: ஹலோ சூரியன் எஃப்.எம் ஒழுங்கா சொல்லுங்க.
7: ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?
FM:சூரியன் எஃப்.எம் தாங்க.
7: அப்படியா? நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?
FM:கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.
7:ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?
FM: சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.
7: அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?
FM: வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?
7:நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.
FM:முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?
7:மலை. ஏழுமலை. .
FM:ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.
7:மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.
FM:சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.
7: புறாக் கூடு போல முப்பது ரூமு..
FM:ஓகே சார். உங்க வழிக்கே வரேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?
7: நான் தாங்க பாடினேன். ஏன். நல்லாயில்லையா?
FM:ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.
7: சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.
FM:இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.
7:என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.
FM:அப்படியில்ல சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.
7:அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?
FM:ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,
7:அது எப்படி உங்களுக்கு தெரியும்?
FM: சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?
7: நான் ரெடி.
FM:உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?
7:மந்திரா
FM:மந்திரா பேடியா?
7:அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. பார்த்தா பொண்ணு மாதிரிதான் தெரியுது
FM:சார். இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல யார புடிக்கும்?
7:கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். . பார்க்கலையா?
FM:சார். ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?
7: என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.
FM:ஓக்கே சார் தோனியின் சொந்த ஊர் எது?
7:அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?
FM:பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.
7: ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)
FM: யாரு சார் அது பக்கத்துல?
7:ஆறு.
FM: அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.
7:அதான் ஆறு.
FM:ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?
7:ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க.
FM: அடுத்த ரவுண்ட் ஜி.கே
7: B.K தெரியும். அது என்ன G.K.?
FM: சார். ஜெனரல் நாலெட்ஜ்.
7: அப்படி ஒரு சரக்கா?
டொக். ஏழுவின் நிலைய லேட்டாக புரிந்தக் கொண்ட அவர் லைனை கட் செய்கிறார்.
Friday, June 12, 2009
Labels:
from the net
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
kalaayo kalaai!!! :D LOL
Sooper daa.. :-)
Sema mokka da raama :)
Post a Comment